கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, சாந்தி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், பெர்ஜின் தனது நண்பனின் மனைவியான அமலி வனஜா என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனை சாந்தி கண்டித்ததால், பெர்ஜின், வனஜா மற்றும் அவரது இரு குழந்தைகளுடன் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் ரகசியமாக வீடு வாடகைக்கு எடுத்துத் தனியாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
தன் கணவர் கள்ளக்காதலியுடன் வசிக்கும் விபரத்தை அறிந்த சாந்தி, நேராக அந்த வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். ஆனால், உள்ளே இருந்தவர்கள் நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமும் வேதனையும் அடைந்த சாந்தி, தனது இரு மகன்களுடன் வீட்டின் முன்பே அமர்ந்து, கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து வந்த வடசேரி போலீசார் சாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சாந்தி, தன் கணவர் 50,000 ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கியும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எதுவும் செய்யாமல் நண்பனின் மனைவியுடன் வாழ்ந்து வருவதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டினார். மேலும், உண்மை தெரிந்தே இவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்த அண்டை வீட்டாரும் தன்னை அங்கிருந்து வெளியேறச் சொல்வதாகவும், வனஜாவின் மூத்த மகன் கத்தியால் குத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். தன் கணவர் காவலர் என்பதால் போலீசார் அவருக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி சாந்தி கதறியது காண்போரைக் கண்கலங்க வைத்தது.
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…
முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…