பயங்கரத்தின் உச்சம்..! பாம்பின் தலை மீது பொருத்தப்பட்ட கேமரா… குகைக்குள் காத்திருந்த அதிர்ச்சி… இது நிஜமா? அல்லது AI மாயையா..?

By Soundarya on தை 10, 2026

Spread the love
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் பாம்பின் உடலில் சிறிய கேமராவைப் பொருத்தி அதனைப் புற்கள் நிறைந்த பகுதிக்குள் அனுப்பி வைக்கிறார். அந்தப் பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று தனது வசிப்பிடமான ஒரு குகைக்குள் நுழைகிறது. அங்கே நூற்றுக்கணக்கான பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பதையும், பல பாம்புகள் படம் எடுத்து ஆடுவதையும் அந்த கேமரா மிக நெருக்கமாகக் காட்டுகிறது. மனிதர்கள் செல்ல அஞ்சும் அந்தப் பயங்கரமான இடத்தைப் பாம்பின் பார்வையில் பார்ப்பது பார்ப்பவர்களை அதிர வைக்கிறது.

 

View this post on Instagram

 

   

A post shared by VAIBHAV SHIVHARE (@neuralreelai)

இருப்பினும், இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. வீடியோவில் உள்ள காட்சிகளின் தத்ரூபத்தைப் பார்த்த பலரும், இது உண்மையான காட்சி அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கற்பனை வீடியோ என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இத்தகைய தத்ரூபமான வீடியோக்களை உருவாக்குவது எளிது என்பதால், இது வைரல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.