தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான்கான் இடையே காதல் மலர்ந்ததாக பல செய்திகள் உலா வந்தன.

ஆனால் இது தொடர்பாக இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை கவரும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

