செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் (KMCH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அவசரச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அவரது உடல்நிலை நன்றாக சீராகி முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது காய்ச்சல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை காலையே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். குணமடைந்ததைத் தொடர்ந்து அவர் நாளை சென்னைக்கு புறப்பட்டுச் செல்வார் என தவெக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.