சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி பிரதமர் நரேந்திர மோடியிடம் மிகவும் மழலை மொழியிலும், கனிவான பாணியிலும் கோரிக்கை ஒன்றை வைக்கிறாள். தான் வளர்ந்த பிறகு பிரதமர் மோடிக்கு மட்டுமே வாக்களிப்பேன் என்று கூறி, அதற்குப் பகரமாக ஒரு சுவாரசியமான நிபந்தனையையும் அந்தச் சிறுமி விதிக்கிறாள்.
அந்தச் சிறுமி பிரதமர் மோடியிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவர் அடுத்த முறை தொலைக்காட்சியில் தோன்றும் போது, அனைத்து அம்மா-அப்பாக்களிடமும் தங்கள் குழந்தைகளைத் திட்ட வேண்டாம் என்று கூற வேண்டும் என்பதாகும். மேலும், குழந்தைகளைத் திட்டும் பெற்றோருக்கு ‘அடி’ கொடுக்கப்பட வேண்டும் என்றும், பெற்றோர் தங்களுக்கு நிறைய ஐஸ்கிரீம் மற்றும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் மழலை மாறாத குரலில் அவள் கூறுகிறாள்.
https://www.instagram.com/reel/DYopfU8Ma0Z/?utm_source=ig_web_copy_link
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் லைக் செய்து, பகிர்ந்து வருகின்றனர். கைகளைக் கூப்பிக் கொண்டு, முகத்தில் அழகான புன்னகையுடன் பெற்றோர் மீது அந்தச் சிறுமி செய்த இந்த அப்பாவியான முறைப்பாடு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளதுடன், குழந்தைகளின் தூய்மையான மனதையும் வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
