முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா திடீரென மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு முதலில் ஒதுக்கப்பட்டிருந்த நிதித்துறைக்கு பதிலாக, தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக அவர் மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த நிதித்துறை, தற்போது மரியா வில்சனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், நிதித்துறையைக் கவனிப்பதாக இருந்தால் முழுமையாகச் சென்னையிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால், வருவாய்த்துறை மூலமாகவே அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் உருவாக்கி, மக்களோடு மக்களாக நேரடியாக இருந்து பணியாற்ற முடியும் என்பதால், தனது இந்த விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் மனது திறந்து நேரில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
