ஆபத்தில் உதவிய காங்கிரஸ்.. சி.வி.சண்முகம் சீட்டை தூக்கிக் கொடுக்கும் முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்….!

By Nanthini on வைகாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கு வரும் ஜூன் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் அண்மையில் நடந்த மயிலம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடத்தை நிரப்பவே தற்போது இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெறும் என்றும், போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூன் 18 அன்றே வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பெரும்பான்மைக்குச் சில இடங்கள் குறைவாக இருந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏ-க்களின் ஆதரவை உடனடியாக வழங்கி விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க முதற்புள்ளி இட்டது. அதனைத் தொடர்ந்து இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. இந்த பலத்தின் அடிப்படையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவது உறுதி என்ற சூழல் நிலவுகிறது.

தற்போது கூட்டணி கட்சிகளின் தயவுடன் தவெக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதால், இந்த எம்பி சீட்டை தங்களுக்குப் பேருதவி புரிந்த கூட்டணி கட்சி ஒன்றுக்கே விட்டுக் கொடுக்க விஜய் யோசித்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, தவெக ஆட்சி அமைக்கத் திணறிக்கொண்டிருந்த இக்கட்டான நேரத்தில், சற்றும் தாமதிக்காமல் முதலில் வந்து கைகொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கலாம் என்று தவெக தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

   

அதிலும் முக்கியமாக, காங்கிரஸ் மற்றும் தவெக இடையே கூட்டணி அமைய அடித்தளமாக விளங்கியவரும், இரு கட்சிகளையும் இணைத்த ‘அச்சாரம்’ என்று போற்றப்படுபவருமான காங்கிரஸின் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த பதவியை வழங்கினால் மிகச் பொருத்தமாக இருக்கும் எனத் தவெக தரப்பில் பேசப்பட்டு வருகிறது. கைம்மாறாகவும், எதிர்காலக் கூட்டணியை மேலும் பலப்படுத்தவும் கதர் சட்டையினருக்கு இந்த எம்பி பதவியை விஜய் விட்டுக் கொடுத்தால், அது தமிழக அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.