சவுதிக்கு டாடா காட்டிய இந்தியா.. அம்பானியின் ‘மெகா’ மாஸ்டர் பிளான்..! அமெரிக்கா, சவூதியை ஓரங்கட்டி லாபத்தில் குதித்த ரிலையன்ஸ்…!!

By Swetha on வைகாசி 22, 2026

Spread the love

உலக அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மேற்கு ஆசியப் போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி உத்தியில் அதிரடி மாற்றங்களைச் செய்து, ஜாம்பவான்களான சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெனிசுலாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) அடுத்தபடியாக வெனிசுலா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மட்டும் வெனிசுலா நாடானது இந்தியாவிற்கு நாள் ஒன்றுக்குச் சுமார் 4,17,000 பேரல் கச்சா எண்ணெய்யை வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்பால் சவூதி அரேபியாவின் எண்ணெய் விலை மிக அதிகமாக இருந்ததால் இந்திய நிறுவனங்கள் அதனைப் புறக்கணித்தன; இதனால் சவூதியின் விநியோகம் பாதியாகச் சரிந்தது. அதேபோல, அமெரிக்கக் கடற்படை முற்றுகையால் ஈரானிடம் இருந்தும், முடக்கத்தால் ஈராக்கிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வரத்து ஸ்தம்பித்ததால், அந்த இடைவெளியை இந்தியா தற்போது வெனிசுலா மூலம் நிரப்பியுள்ளது.

   

சர்வதேச சந்தையை விட வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மிக மலிவான விலைக்குக் கிடைப்பது இந்தியாவிற்குப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது. இருப்பினும், வெனிசுலாவின் எண்ணெய் அதிக சல்பர் கொண்ட கனரக (Heavy) வகையைச் சேர்ந்தது என்பதால் சாதாரண ஆலைகளால் இதனைச் சுத்திகரிப்பது கடினம். ஆனால், குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் இதற்குரிய அதிநவீன சுத்திகரிப்பு உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், இந்த மலிவு விலை எண்ணெய்யைப் பிரித்தெடுத்து சுத்திகரிப்பதன் மூலம் அம்பானிக்கு மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்து வருகிறது.