அடுத்த குட் நியூஸ்… வங்கி கணக்கில் வருகிறது ரூ.4000… CM விஜய் புதிய உத்தரவு…!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

தமிழகத்தில் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியின்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ தகுதி உடையவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார். தற்போது நடைமுறையில் உள்ள பழைய திட்டத்தின் கீழ் சுமார் 75,000 பேர் மாதந்தோறும் கல்வித் தகுதிக்கு ஏற்ப ₹300 முதல் ₹1,000 வரை மட்டுமே உதவித்தொகை பெற்று வரும் நிலையில், இந்தத் தொகையை மாற்றியமைத்து புதிய திட்டத்தை முழுவீச்சில் கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.