பகீர்..! தாயின் முகத்தில் மயக்க மருந்து தெளித்துவிட்டு… இரண்டு குழந்தைகளைக் கடத்திச் சென்ற நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

By Soundarya on சித்திரை 5, 2026

Spread the love

பீகார் மாநிலம் திக்வாராவிலிருந்து சீதாமர்ஹியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஒரு பெண் ரயில் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். நயாகாவ் மற்றும் சோன்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்துள்ளார். இதில் அந்தப் பெண் மயக்கமடைந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அவரிடமிருந்த பணம் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்திக் கொண்டு தப்பியோடினார்.

 பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் இருந்ததைக் கண்ட சக பயணிகள், ரயில் ஹாஜிப்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையை வந்தடைந்ததும் அவரை ரயிலில் இருந்து இறக்கி நடைமேடையில் தங்க வைத்தனர். அந்தப் பெண்ணிடமிருந்த சிறிய ரக செல்போன் மூலம் அவரது விவரங்களைச் சேகரித்த பயணிகள், அவர் திக்வாராவைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (GRP) தகவல் தெரிவிக்கப்பட்டது.

   

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜி.ஆர்.பி.எப் (GRPF) குழுவினர், அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கிருக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், தப்பியோடிய அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குழந்தைகளை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.