டெல்லி மாநகராட்சியில் (MCD) தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுவதன் சிறப்பம்சங்கள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக அரசு வேலை என்றாலே காவல்துறை அல்லது வங்கிப் பணிகளை மட்டுமே இலக்காகக் கொள்ளும் இளைஞர்களுக்கு, இந்த வீடியோ ஒரு புதிய பார்வையை வழங்கியுள்ளது.ஒரு நாளைக்குச் சுமார் 6 மணிநேரம் மட்டுமே வேலை. மதியத்திற்கு மேல் வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்பதால், தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக நேரம் கிடைக்கும். சிறிய குழந்தைகளுக்கு அடிப்படைகளைக் கற்பிப்பது மட்டுமே பணி என்பதால், மற்ற அரசுப் பணிகளை விட இதில் மன அழுத்தம் மிகவும் குறைவு.
View this post on Instagram
ஆச்சரியமான தகவல் என்னவென்றால், ஒரு MCD தொடக்கப்பள்ளி ஆசிரியரின் சம்பளம், டெல்லி காவல்துறையின் துணை ஆய்வாளர் (Sub-Inspector) ஒருவரின் சம்பளத்திற்கு இணையானது என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகள், பண்டிகை விடுமுறைகள் என ஆண்டு முழுவதும் அதிக விடுமுறை நாட்கள் கிடைப்பதால், குடும்பத்துடன் செலவிடப் போதுமான நேரம் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை மற்றும் கௌரவமான வருமானத்தை விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த அரசுப் பணியாகப் பார்க்கப்படுகிறது.
