BREAKING: அறிவித்தார் TVK செங்கோட்டையன்… கொங்குவில் நடக்கப்போகும் சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 7, 2025

Spread the love

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தபிறகு அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அசைன்மெட்களை விஜய் கொடுத்து வருகிறார், மேலும் கொங்கு மண்டலத்தில் தவெகவை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், இதற்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.