புனேயில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆன பியூஸ் அசோக் (23) அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சுவலி என்று மீட்டிங்கில் இருந்து வெளியேறிய அவர் திடீரென்று ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அசோக் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில், நான் ஒரு சிறந்த மகனாக இருந்திருப்பேன். உனக்கு ஒரு சிறந்த மகன் கிடைக்க வேண்டும். நான் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து விட்டேன். தயவுசெய்து இதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். கவனமாக இருங்கள் என்று தனது அப்பாவுக்கு உருக்கமான கடிதத்தை அசோக் எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணையை தீவிர்படுத்தி உள்ளனர்.
