பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் இருந்து பெய்து வரும் பருவமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 120க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததோடு கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. தற்போதும் தொடர்ந்து கனமழை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல இடங்களில் சாலைகள் உடைந்து கிடக்கின்றன.
இதனால் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமலும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தியது. இப்படியான நிலையில் கனமழையில் சாலை அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பஞ்சாபில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்வதற்கு உள்ளூர் வாசிகள் மனித பாலமாக மாறி உதவினர். தற்போது தொடர்பான வீடியோ வைரலாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
शाबाश पंजाबियों…
मोगा के एक गांव की सड़क बह गई। स्कूल जाने वाले बच्चे फंस गए। लोगों ने अपनी पीठ को पुल बनाकर 30 बच्चों को पार कराया। कई साल बाद ऐसी तस्वीर देखने को मिली।
सफेद टीशर्ट और शर्ट वाले युवक की तारीफ होनी चाहिए। pic.twitter.com/7x0eOPDrPL— Rishu Raj Singh (@rishuraj_chd) July 24, 2025
