முன்னணி ஹீரோக்கள், நல்ல கதையுடன் பல கோடி செலவு செய்து எடுத்தும்.. ரிலீஸ் ஆகாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்..!

By Nanthini on ஆனி 21, 2025

Spread the love

சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று எத்தனையோ திறமைகள் இருந்து இளைஞர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டம் என்ற ஒன்று இல்லாமல் போவதால் புயலில் காணாமல் போகும் புல்லை போல சினிமாத்துறை அவர்களை காணாமல் செய்து விடுகின்றது. அதிர்ஷ்டம் இருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற ஒரு எண்ணம் பலருக்கும் உள்ளது. இதையெல்லாம் மீறி சினிமாவில் நுழைந்து ஒரு படத்தை எடுத்து விட்டால் பணம், சென்சார், கால் சூட் மற்றும் ஈகோ பிரச்சனை என்று பல சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் ஏராளமான படங்கள் இன்றளவும் கிடப்பில் கிடக்கின்றன. அப்படி தமிழ் சினிமாவில் நல்ல கதை கொண்டும் ரிலீஸ் ஆகாமல் இருக்கக்கூடிய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்ட்டி' வெளியாகாமல் சிக்கலில் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம்: வெங்கட் பிரபு  | venkat prabhu interview about party - hindutamil.in

   

 

   

தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கு படங்களை இயக்குவதில் பிரபலமான வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ் மற்றும் மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் பார்ட்டி. முழுக்க முழுக்க பிஜி தீவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு அந்த நாட்டின் ஆட்சி மாற்றம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தடையில்லா சான்று இன்றுவரை வழங்கப்படாததால் பல ஆண்டுகளாக இந்த படம் கிடப்பில் கிடக்கிறது.

 

துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம்

பிரபல இயக்குனரான கௌதமேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இந்த படமும் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் அப்படியே உள்ளது. இதில் ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் நிதி பிரச்சனை மற்றும் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்த திரைப்படம் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ் அமுதன் - ஐஎம்டிபி

அடுத்து தமிழ் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சி எஸ் அமுதன் தன்னுடைய அடுத்த படத்தை ரெண்டாவது படம் என்ற தலைப்பில் இயக்கினார். இந்த படம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் வெளியாகாமல் போய்விட்டது. தன்னுடைய முதல் படத்திலேயே அமுதன் பல முன்னணி நடிகர்களை கேலி செய்து படத்தை எடுத்ததால் பலரின் எதிர்ப்பை சந்தித்த இவருடைய அடுத்த படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

இடம் பொருள் ஏவல்' வெளியீடு எப்போது? - திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தகவல் |  idam porum yaeval release - hindutamil.in

அடுத்து ஆனந்த் பாலாஜி இயக்கத்தில் சந்தானம் நடித்த சர்வ சுந்தரம், கார்த்திக் நிறைய நடித்த நரகாசுரன், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள இடம் பொருள் ஏவல், அரவிந்த்சாமி மற்றும் திரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை 2, விஷ்ணு விஷால் நடித்த ஜகஜால கில்லாடி மற்றும் மோகன்தா சொல்லிட்ட ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் உள்ளது. நமக்குத் தெரிந்த படங்கள் இவ்வளவுதான் என்றால் இன்னும் பெயரிடப்படாத பல படங்கள் பாதி எடுக்கப்பட்டு பல காரணங்களால் அப்படியே வெளியாகாமல் கிடப்பில் கிடக்கின்றன. பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் பல காரணங்களால் இது போன்ற படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருப்பது சினிமாவிற்கு பெரிய தோல்வியாக தான் பார்க்கப்படுகிறது.