Connect with us

CINEMA

ப்ளூசட்டை மாறன் அறிவு ஜீவியா…? இல்ல அரைவேக்காடா…? பெரிய வீடியோ போட்டு விளக்கம் கொடுத்த பிரபலம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அறிமுக ஹீரோவாக இருந்தாலும் சரி, அவர்களது படங்களை பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து பாப்புலர் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். அண்மையில் இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கிய ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படத்தை பாரதிராஜாவே பார்த்து வியந்து பாராட்டினார். இருப்பினும் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

   

இதையடுத்து தனது விமர்சகர் வேலையை தொடர்ந்து தற்பொழுது செய்து வருகிறார். முன்னணி நடிகர்களை விமர்சிப்பதனால் இவருக்கு சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் இருந்து அவ்வப்போது மிரட்டல்களும், எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. இதையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாத அவர் தொடர்ந்து தனது வேலையை செய்து வருகிறார்.

கடந்த ஒரு சில  தினங்களுக்கு முன்பு தான் விஜய் ஆண்டனி நடித்த ‘ரோமியோ’ படத்தை ப்ளூ சட்டை மாறன் தவறாக விமர்சனம் செய்தார். இதைத்தொடர்ந்து இருவருக்குள்ளும் ட்விட்டரில் ஒரு போரே நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது யூடியூப் பிரபலமான பிஸ்மி, தனது வலைப்பேச்சு என்ற  யூடியூப் தளத்தில் ‘ ப்ளூ சட்டை மாறன் அறிவு ஜீவியா? அரைவேக்காடா?’ என பெரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘ப்ளூ சட்டை மாறன் என்பவர் நேர்மையான விமர்சகர். அவரை பணம் கொடுத்தும் வாங்க முடியாது.  நட்பு பாராட்டினாலும் வாங்க முடியாது. அவர் தான் சரியான வழியில் சென்று படங்களை விமர்சனம் செய்கின்றார். சினிமா பிரபலங்கள் நடிக்கும் படம் தரமானதாகவும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று காணப்பட்டு இருந்தால் ப்ளூ சட்டை மாறன் போன்ற ஆயிரம் பேர் விமர்சித்தாலும் அந்த படம் வெற்றி அடையும்.

தமிழ் சினிமாவில் தரமற்ற படங்களை கொடுத்து அந்தப் படம் வெற்றி அடையாத நிலையில், இவ்வாறான விமர்சகர்கள் மேலே பலியை போட்டு விடுகிறார்கள் சினிமா துறையினர். எனவே ப்ளூ சட்டை மாறன் சொல்கின்ற விமர்சனங்கள் அத்தனையும் நியாயமாகவே உள்ளது. அவர் எந்த ஒரு பொய்யான விமர்சனத்தையும் முன் வைப்பதில்லை. தமிழ் சினிமாவில் அவரை பிடிக்காதவர்களுக்கு அரைவேக்காடாகவும், அவரது ரசிகர்களுக்கு அவர் அறிவுஜீவியாகவும் தெரிகிறார்’  என கூறியுள்ளார். இதனை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top