80ஸ் நடிகை மாதவியின் கணவர், 3 மகள்களை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இதோ…

80ஸ் நடிகை மாதவியின் கணவர், 3 மகள்களை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கவர்ச்சியாலும் அழகாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை மாதவி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தில்லுமுல்லு, கமல்ஹாசன் உடன் காக்கிச்சட்டை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் தற்போது வரை இருந்து கொண்டே இருக்கிறது.

தன்னுடைய கவர்ச்சியால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர்.

1980 ஆம் ஆண்டு புதிய தோரணங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு மற்றும் விடுதலை, ராஜ பார்வை மற்றும் காக்கி சட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ஃப் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகு முழுமையாக திரை உலகை விட்டு ஒதுங்கிய இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

அதன் பிறகு இவரை மீண்டும் திரையுலகில் பார்க்க முடியவில்லை.

நடிகை மாதவி மற்றும் சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

அவர்கள் மூன்று பேருமே அம்மாவைப் போலவே அவ்வளவு அழகாக ஹீரோயினிகள் போல ஜொலிக்கின்றனர்.

தற்போது நடிகை மாதவியின் மொத்த குடும்பத்தின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana