அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஆரம்பக்கட்டச் செலவுகளுக்காக ரூ.8,000 நிதியுதவி அளிக்கும் புதிய திட்டம் வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்கும்போது தேவைப்படும் புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
அத்துடன், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
