
CINEMA
69-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா: RRR திரைப்படம் மட்டும் வென்ற விருதுகள் எத்தனை தெரியுமா?…
இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி தற்பொழுது டெல்லியில் தற்பொழுது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இந்த விருதை அறிவித்து கொண்டுள்ளார்.இந்நிலையில் நாட்டின் 69ஆவது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை புஷ்பா (தெலுங்கு ) படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களும், RRR (தெலுங்கு) படத்திற்காக இசையமைப்பாளர் M.M. கீரவாணி அவர்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
RRR படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய கிங் சாலமனுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும், சிறந்த நடன இயக்குனர் விருது பிரேம் ரக்சித்துக்கும், தொழில்நுட்ப கலைஞர் சீனிவாசன் கிடைத்துள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருது RRR படத்துக்கு இசையமைத்த கீரவாணிக்கும் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிறந்த பொழுதுபோக்கு பாடம் படமாகவும் RRR படத்துக்கு விருது கிடைத்துள்ளது. அதன்படி ஆர் ஆர் திரைப்படம் மட்டும் சிறந்த ஸ்டாண்ட், சிறந்த நடனம், special effects, சிறந்த இசை மற்றும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் போன்ற 5 பிரிவுகளில் விருதுகளை வென்று குவித்துள்ளது.