சீனாவின் குவாங்டாங் மாகாணம் மேஜோ பகுதியைச் சேர்ந்த 60 வயது நிரம்பிய ஜோங் ஜுவான்ஜுவான் என்ற பெண்மணி, தன் மகனின் கேமிங் பழக்கத்தைப் புரிந்து கொள்வதற்காக விளையாடத் தொடங்கி, இன்று 5.27 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களுடன் இணையத்தில் வைரல் கேமிங் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் பருவத்தில் படிப்பைப் பாழாக்கிவிட்டு இன்டர்நெட் கபேக்களில் கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது இளைய மகனைத் தேடிச் சென்று அடித்து இழுத்து வந்தவர்தான் இந்த ஜோங் ஜுவான்ஜுவான். ஆனால், 2020-இல் தனது மகன் மீண்டும் வீட்டிலேயே அதிக நேரம் கேம் விளையாடுவதைக் கண்ட அவர், கோபப்படாமல் அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மகனிடமே பயிற்சி பெற்றார். ஆரம்பத்தில் சுவர்களில் முட்டி மோதி, பார்வைக் கோளாறு மற்றும் மெதுவான நகர்வுகளால் திணறியபோதிலும், விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து கேமிங்கில் தேர்ச்சி பெற்றார்.
‘ஆன்ட்டி ஜூவான்’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், 2022 முதல் தினமும் 2 முறை கேமிங் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து வருகிறார். இதுவரை 8,000 மணிநேரத்திற்கும் அதிகமாகக் கணினியில் ‘கவுண்டர் ஸ்டிரைக்’ ( போன்ற ஷூட்டிங் கேம்களை விளையாடியுள்ள இவர், 2024 டிசம்பரில் நடைபெற்ற போட்டியொன்றில் ரஷியாவைச் சேர்ந்த 17 வயது சர்வதேச கேமிங் சாம்பியனான ‘டாங்க்’ என்பவரையே சுட்டு வீழ்த்தி உலகெங்கிலும் உள்ள கேமர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
