6 வயசுலயே என்ன ஒரு நடிப்புடா சாமி! சிவாஜி தோத்துருவாரு போலருக்கே… வீடியோ பாருங்க…அப்புறம் நீங்களே சொல்லுவீங்க..!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகள் என்னவோ எப்போதும் விளையாடிக் கொண்டும், செல்போனில் கேம்ஸ், வீடியோக்கள் பார்க்கவும் தான் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் சதா, சர்வநேரமும் படி, எழுது என டார்ச்சர் செய்துகொண்டே இருக்கின்றனர். இதோ இங்கேயும் அப்படித்தான் ஒரு பொடியனை 6 வயதே ஆன சிறுவனை அவனது தந்தை வீட்டுப்பாடம் எழுதச் சொல்லிவிட்டு ரூமை விட்டு செல்கிறார். அவனோ செம ஜாலியாக செல்போனில் கார்ட்டூன் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பொடியனின் தந்தை ரூமுக்குள் வரும்போது மீண்டும் எழுதுவது போல் நடிக்கிறான். இதில் ஒரு சூப்பர் டெக்னிக்கை பாளோ செய்கிறான். அதில் வீட்டின் கதவுக்கும், செல்போனுக்கும் கனெக்‌ஷன் கொடுத்து வைத்துள்ளான். கதவைத் திறக்கும்போது ஆட்டோமேட்டிக்காக செல்போன் ஒளிந்து கொள்ளும்படியும், மற்ற நேரங்களில் செல்போன் மேலே இருந்து தெரிவது போலவும் வடிவமைத்துள்ளார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன். அப்புறம், இந்த சிறுவனின் நடிப்பை நீங்களும் மெச்சுவீங்க. வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *