வெறும் மூன்றே மாதங்களில் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்த 4 மலையாள திரைப்படங்கள்

By Deepika

Published on:

40 வருடத்திற்கு முன்னர் அதிக அடல்ட் படங்களை வெளியிட்டது மலையாள சினிமா. அடல்ட் படங்கள் என்றால் மலையாள சினிமா என்ற அடையாளத்தை சமீப காலமாக அதன் இயக்குனர்கள் மாற்றி விட்டார்கள். ஒரு நல்ல குடும்ப படம் ஆகட்டும், ஆக்சன் படங்கள் ஆகட்டும், த்ரில்லர் ஆகட்டும், மலையாள சினிமா இது அனைத்திலும் ஜெயித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

Drishyam

குறிப்பாக இயக்குனர் ஜீத்து ஜோசப் இலாயக்கத்தில் வெளியான த்ரிஷ்யம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆகி அங்கும் சூப்பர்ஹிட் கொடுத்தது. மக்களும் மலையாள சினிமாவை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். புலிமுருகன், லூசிபர், ஜன கன மன என வருடத்திற்கு வருடம் மலையாள சினிமா ஒருபடி மேலே சென்று கொண்டிருக்கிறது.

   

அந்த வகையில் இந்த வருடம், அதாவது 2024 ஆம் ஆண்டு வெறும் மூன்றே மாதங்கள் முடிந்துள்ள நிலையில் நான்கு படங்கள் மொத்த இந்திய சினிமா ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அப்படிப்பட்ட நான்கு படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பிரேமலு

Premalu

புதுமுகங்களை வைத்து உருவான அழகான ஒரு காதல் கதை தான் பிரேமலு. யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அசுர வெற்றியை பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாமல் உட்பட இதன் வசூல் மட்டும் 120 கோடியை தாண்டிவிட்டது. இதன் பட்ஜெட்டே வெறும் 10 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மயுகம்

Bramayugam

மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் தான் பிரம்மயுகம். ஹாரர் ஜானரில் வெளியான இந்த படம், மிக அற்புதமாக உள்ளது. இதன் கதையும் சரி, படம் எடுத்த விதமும் சரி மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி வெளியான இந்த படம் ஒரே மாட்டாஹத்தில் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுமேல் பாய்ஸ்

Manjummel boys

எங்கு திரும்பினாலும் இப்போது மஞ்சுமேல் பாய்ஸ் தான். குணா படத்தின் குறிப்பு, கண்மணி அன்போடு காதலன் இவை எல்லாம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். குணா குகைக்குள் தவறி விழுபவரை காப்பாற்றும் இந்த கதை இறுதி நிமிடம் வரை நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்தது. இதுவரை வெளிவந்த மலையாள படங்களிலே இதுதான் அதிக வசூல் சாதனை செய்து சாதனை புரிந்தது. கிட்டத்தட்ட 212 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆடுஜீவிதம்

Aadujeevitham

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் ஆடுஜீவிதம். துபாயில் வேலை என செல்லும் இளைஞன், அங்கு ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக மாட்டிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதும், அவன் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறான் என்பதே ஆடுஜீவிதம் படத்தின் கதை. யாரும் எதிர்பார்க்காத தாக்கத்தை இது ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல இரண்டே நாளில் 16 கோடி வசூல் செய்துள்ளது.

author avatar
Deepika