தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கியவர் தான் நடிகர் சிவக்குமார். அவருடைய மகன்கள் தான் சூர்யாவும் கார்த்தியும். முதலில் சினிமாவிற்குள் நுழைந்தது சூர்யா என்றாலும் தனது அண்ணனுக்கு பிறகு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த கார்த்தி தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். கார்த்தி நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் சூர்யாவின் ஆரம்பகால திரைப்படங்கள் மாஸ். சமீபத்தில் கதை தேர்வு சரியாக இல்லாததால் நிறைய பிளாப் என்று பலரும் சொல்கின்றன. சூர்யாவுக்கும் அவருடைய தம்பி கார்த்தியையும் வைத்து ஒரே இயக்குனர்கள் இயக்கிய வெவ்வேறு படங்களில் யாருக்கு ஹிட் , யாருக்கு பிளாப் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பையா மற்றும் அஞ்சான் (லிங்குசாமி)
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பையா. கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அது மட்டும் அல்லாமல் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய திரைப்படம் தான் அஞ்சான். சூர்யா இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் சமந்தா ஜோடியாக நடித்திருப்பார். வித்தியாசமான கதைகளத்துடன் இருந்தாலும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் – என்ஜிகே (செல்வராகவன் )
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால மன்னர்களின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படம் அப்படியே பிளாப் ஆகிவிட்டது. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சாய்பல்லவி நடித்திருந்தார்.

கடைக்குட்டி சிங்கம் மற்றும் எதற்கும் துணிந்தவன் (பாண்டிராஜ்)
பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கார்த்திகை வைத்து இயக்கிய திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். சொந்த பந்தங்களையும் கூட்டு குடும்பத்தையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. ஆனால் அதே இயக்குனர் சூர்யாவை வைத்து இயக்கிய திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெறாமல் போனது.

சிறுத்தை மற்றும் கங்குவா (சிவா)
சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சிறுத்தை. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தான் சாதாரண சிவா சிறுத்தை சிவாவாக மாறினார். இந்தத் திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில் தமன்னா ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதே இயக்குனர் தற்போது 350 கோடி பட்ஜெட்டில் இயக்கிய திரைப்படம் தான் கங்குவா.

ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யாவும் தீவிர ப்ரொமோஷனல் ஈடுபட்டு வந்தார். ஆனால் படம் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் வெறும் இரைச்சல் மட்டுமே அதிகமாக இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அண்ணன் தம்பிகளாக சூர்யாவும் கார்த்தியும் இருந்த போதும் இருவருக்கும் ஒரே இயக்குனர்கள் படம் இயக்கிய வேளையில் ஒருவருக்கு ஹிட் படமும் மற்றவருக்கு பிளாப் படமும் எடுப்பது என்ன நியாயம் என கேட்டு வருகிறார்கள்.
