மிலிந்த் சோமன் இந்திய நடிகர், மாடல், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர் ஆவார். 1995 ஆம் ஆண்டு ஆயிஷா சினாயின் இசை வீடியோவான மேட் இன் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றார். தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் மிலிந்த் சோமன்.
2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மிலிந்த் சோமன். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பையா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
தொடர்ந்து வித்தகன், அலெக்ஸ் பாண்டியன், மருத்துவர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மிலிந்த் சோமன். இவர் ஒரு தீவிர உடற்பயிற்சி செய்பவர் மற்றும் பிட்னஸ் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புபவர். தற்போது ஒரு நேர்காணலில் இவரது டயட்டை பற்றி கூறியிருக்கிறார். அது அனைவரும் அசரும் வகையில் இருக்கிறது.
மிலிந்த் சோமன் கூறியது என்னவென்றால் நம் உடலை மிகவும் கவனித்துக் கொள்ள வேண்டும். சத்தானதாக சாப்பிட வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும் நான்வெஜ் என்பது ஒரு நல்ல உணவு கிடையாது. நான் அதை வெறும் டேஸ்டுக்காக மட்டும்தான் சாப்பிடுவேன். நான் வெஜிடேரியன் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவேன். தினமும் 3 கிலோ பழங்கள்தான் என்னுடைய காலை உணவு. அதுமட்டுமில்லாமல் சாக்லேட், முந்திரி அதிகம் போட்ட கிச்சடி போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஓப்பன் ஆக கூடியிருக்கிறார் மிலிந்த் சோமன்.