“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…” தமிழக அஞ்சல் துறையில் 2,118 மெகா அரசுப் பணியிடங்கள்… முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அடிப்படை கணினி இயக்கும் திறனும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமாகும்.

18 முதல் 40 வயதுடைய விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு எதுவுமின்றி, 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.