“பட்டப்பகலில் நடந்த ரத்தக்களறி…” முன்விரோதத்தால் தொழிலதிபரை சாய்த்த 20 வயது வாலிபர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஆவணி 3, 2026

Spread the love

சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். 38 வயதான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பொத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சதீஷ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த நபர் ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் வீட்டிற்குச் சென்று கத்தியை எடுத்துவந்து சதீஷைச் சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த ஆண்டு பேனர் வைப்பது தொடர்பாகச் சதீஷிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான பரத் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதமே இக்கொலைக்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்துத் திருவள்ளூரில் பதுங்கியிருந்த பரத்தைக் காவல்துறையினர் விரைந்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.