20 வருடத்திற்கு முன் தொலைந்த மகள்.. மகனுக்கு மனைவியா? பெற்றோர் கூறிய ரகசியத்தால் கதறிய தாய்!!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஒன்று நடைப்பெற இருந்தது. இதன்பின்னர், திருமண ஏற்பாட்டின் போது, மணமகனின் தாயார், வருங்கால மருமகளின் கையில் உள்ள பிறப்பு அடையாளத்தை கண்டு அதிர்ந்துபோனார்.

அதில், சுமார் 20 வருடங்களுக்கு முன் தொலைந்துபோன அவரின் மகளின் கையில் இருந்தே அதே அடையாளம் இருந்துள்ளது. இதுகுறித்து, மருமகளின் பெற்றோரிடம் விசாரித்தப்போது, அவர்களும் பல ஆண்டுக்கு முன் சாலையோரத்தில் கிடந்த பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாக தெரிவித்துள்ளனர்.

இதனால், அவர் ஆனந்த கண்ணீரில், கதறி துடிதுடித்துள்ளார். இதுமட்டுமின்றி அடுத்த ஒரு பெரிய ட்விஸ்டும் காத்திருந்துள்ளது. அது, மணமக்கள் இருவரும் அண்னந்- தங்கை தானே எப்படி திருமணம் செய்வது என குழப்பம் எழும் முன், மணமகனின் தாய் மகள் தொலைந்த துக்கத்தில் அப்போதே ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

மேலும், இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்கள் திருமணத்திற்கு எந்த தடையும் அமையவில்லை என உணர்ந்தனர். இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளதை எண்ணி அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *