எழுத்துத் தேர்வு மட்டுமே… ITI மற்றும் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு… டெல்லி அரசுத் துறையில் 1900+ வேலைகள்…!

By SATHISH R on ஆனி 29, 2026

Spread the love

டெல்லி அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,979 ஆசிரியர் (TGT) மற்றும் அறிவியல் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை டெல்லி தடினமான சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், டிஜிடி (TGT), ஜூனியர் சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட், ஐடி அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்குத் தொடர்புடைய பிரிவுகளில் பட்டப்படிப்பு (Degree) அல்லது ஐடிஐ (ITI) முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத்தேர்வு (Computer Based Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், வரும் ஜூலை 15, 2026-க்குள் www.dsssbonline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.