கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் சரண். 13 வயதான இவர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய நண்பர்களோடு வெளியே விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுவனின் நண்பர்கள் மது அருந்து சென்றுள்ளார்கள். அப்போது சரணும் அவர்களோடு சென்று மது குடித்தான். இதனை அடுத்து தான் மது குடித்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்று பயந்துள்ளார். இதனால் வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார் .பிறகு பயத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷத்தை குடித்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பயந்து போன பெற்றோர்கள் அவரை அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார்கள்.
அப்போது ஒரு இடத்தில் தனியாக உட்கார்ந்து இருந்த சரணை பார்த்து ஏன் வீட்டுக்கு வரவில்லை? என்று தந்தை கேட்டுள்ளார். அப்போது சரண் நண்பர்களோடு சேர்ந்து மது குடித்ததாகவும் அதனால் உங்களுக்கு தெரிந்தால் திட்டுவீர்கள் என்று பயந்து வீட்டிற்கு வரவில்லை என்றும் பயத்தால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்கள் .ஆனால் பரிதாபமாக சிறுவன் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கல் வேகமாக வளர்ந்தாலும், மோசடி ஆபத்தும் அதிகரித்துள்ளது. போலி செயலிகள், குறுஞ்செய்திகள், அபத்தமான சலுகைகள் மூலம்…
நேற்று நடைபெற்ற போர்ச்சுகல்லின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சை சைகையை கிளப்பினார். அதாவது…
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே,…
பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில…
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். கைகளை சுழற்றி, முன், பின், பக்கவாட்டு நடை போன்ற மாற்றங்களைச்…