Connect with us

12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து வந்த தம்பதி! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க: நெகிழ்ச்சி தகவல்

NEWS

12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து வந்த தம்பதி! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க: நெகிழ்ச்சி தகவல்

லண்டனை சேர்ந்த தம்பதி 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் கேரளாவிற்கு வந்த நிலையில், அவர்கள் செய்து வரும் செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனை சேர்ந்த Mary மற்றும் அவரது கணவர் Steve Muscroft ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் அங்கிருக்கும் கோவலம் கடற்கரையை சுற்றிப் பார்த்த போது, அங்கு இரண்டு தெரு நாய்கள் சாப்பிடாமல் உடல் மெலிந்து, ஒரு பரிதாப நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர்.

   

   

இதையடுத்து அந்த நாய்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த் அந்த தம்பதி, பின் அந்த தெரு நாய்களுடன் பழகியுள்ளனர். அதன் பின் லண்டன் திரும்ப முயன்ற போது, அவர்கள் பார்த்துக் கொண்ட நாயை யாரும் கவனிக்க முன்வரவில்லை.

 

இதனால் உடனடியாக அவர்கள் அந்த லண்டன் டிக்கெட்டை ரத்து செய்து, கோவளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை எடுத்த அங்கேயே நிரந்தரமாக தங்கி, தெரு நாய்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இது குறித்து Mary கூறுகையில், நான் லண்டனில் வசிக்கும்போது Middlesex பகுதியில் செயல்பட்டு வரும் விலங்குகள் வதை தடுப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான Royal Society for the Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக இருந்துள்ளேன்.

என் கணவர் ஸ்டீவ், சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அப்போதய விடுமுறைக்காக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா வந்தோம். ஆனால் இங்கு வந்ததில் தெரு நாய்களின் நிலையை பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. உடனடியாக அவற்றுக்கு உதவி செய்ய முடிவெடுத்தோம். ஆரம்பத்தில் 2 தெருநாய்களை எடுத்து பராமரித்து வந்த நாங்கள், இப்போது 140 தெரு நாய்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in NEWS

To Top