ரூ.100 கோடி மோசடி வழக்கு… கோர்ட்டில் சரண் அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார்…. பரபரப்பு உத்தரவு….!

By Nanthini on ஐப்பசி 29, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி அளவில் மாபெரும் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகாரில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார் இன்று கோர்ட்டில் சரணடைந்தார். இதனையடுத்து அவரை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் பணப்பரிவர்த்தனை அனைத்தும் இவரைக் மூலமாகவே நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறையில் உள்ள இவருக்கு முதல் வகுப்பு வசதி வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பில் மகேஸ் விவகாரத்தைப் போல இவருக்கும் சிறையில் இந்த சிறப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. ரூ.100 கோடி ஊழல் புகாரின் வேர்கள் எங்கெல்லாம் பரவியுள்ளன என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முத்துகுமாரிடம் நடத்தப்படும் தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.