தந்தையின் அலட்சியத்தால் துடிதுடித்து உயிரிழந்த 10 மாத குழந்தை.. நெஞ்சை ரணமாக்கும் சோக சம்பவம்..!

By Nanthini on ஆனி 19, 2025

Spread the love

பொதுவாகவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் பெரியவர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் நம்மை மீறி அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. இருந்தாலும் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது அவசியம் தான். அதிலும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை வளரும் வரையில் உன்னிப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் தான் இழப்பை சந்திக்க நேரிடும்.

இப்படியான நிலையில் தந்தையின் செயலால் 10 மாத குழந்தைக்கு நடந்த சோகம் பலரையும் கலங்க வைத்துள்ளது. அதாவது மங்களூருவில் தந்தையின் செயலே 10 மாத குழந்தைக்கு எமனாக மாறிய சோகம் நிகழ்ந்துள்ளது. தந்தை புகைத்து வீட்டை கீழே வீசிய பீடி துண்டை விழுங்கிய குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை வளர்க்கும் பெற்றோர்களிடம் இது போன்ற அலட்சியம் நடந்தது கிடையாது.