ஹீரோயினியாகும் குழந்தை நட்சத்திரம் அனிகா….. அதுவும் எந்த படத்தில் தெரியுமா?…. ரசிகர்களுக்கு குஷியான செய்தி….!!!!

By admin

Published on:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

   

மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த இவர் நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.

அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதாவது குட்டி நயன்தாரா என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் தோற்றம் வெகுவாக பலரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் 17 வயதாகும் அனிகா, தற்போது முதல் முறையாக “ஓ மை டார்லிங்” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாக உள்ளார். ஆல்பர்ட் சாமுவேல் இயக்கும் இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் முதன் முறையாக படத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.