பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத அசீம்….. அழ வைத்தது யார் தெரியுமா?…. வெளியான முதல் ப்ரோமோ வீடியோ…..

By Archana

Published on:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

   

இந்நிலையில் தினமும் ஏதாவது ஒரு செயலை செய்து ரசிகர்களை ஜிபி முத்து வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் வேலை தொடங்கிவிட்டது.அதே சமயம் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.அதில் கதை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் கதையை முடித்தால் நாமினேஷன் இருந்து தப்பிக்கலாம் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

அதில் பேசிய போட்டியாளர் அசீம், தன்னுடைய முன்னாள் மனைவி மற்றும் மகன் குறித்து பேசும்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டது என பிக் பாஸ் கூறிய நிலையில் வெளியே வந்த அசீம் உடனடியாக கண்கலங்கி அழுதுவிட்டார்.இந்த காட்சி மட்டுமே முதல் ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana