பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…. ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து…. நியூ லுக்கிங் போட்டோ ஷூட்….!

By admin

Published on:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பல அவமானங்கள் மற்றும் கடின உழைப்பை கடந்து இன்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

   

இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கிளாமரை காட்டாமல் நல்ல குடும்பப் பெண்ணாக படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவரின் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அந்தப் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் விதவிதமான மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.