பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் 90ஸ் கிட்ஸின் நடனம்.. பத்துவருசத்துக்கு முன்னாடி என்ன கூத்தெல்லாம் நடந்திருக்கு பாருங்க..!

By Archana

Published on:

பள்ளிக்கூடங்களே இப்போது ஆன்லைன் மயம் ஆகிவிட்டது. வீட்டிலேயே இருந்து செல்போன்களின் வழியாக இன்று படித்துக் கொண்டு இருக்கிறோம். இது கரோனா காலத்தால் ஏற்பட்ட மாற்றம். இருந்து பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கல்விமுறை இப்போது இல்லை.

   

ஆசிரியர் அடிப்பார். தினமும் வீட்டுப்பாடம் எழுதிச் செல்ல வேண்டும். நன்கு படிக்காவிட்டால் பெயிலாக்கி விடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் சூழல் அப்படி இல்லை. நன்கு படிக்காவிட்டாலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை ஆல்பாஸ் சிஸ்டம் இருக்கிறது. அதேபோல் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இப்போது அடிக்கக்கூடாது என தனி சட்டமே வந்துவிட்டது. அதேபோல் முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளிக்கூடத்தில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும்.

அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும். அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். அதுவும் இப்போது 2009 ஆம் ஆண்டு ஒரு பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழாவில் பசங்க ஆடியது இப்போது வைரலாகிவருகிறது. அதில், ‘அன்றைய கால பேமஸான பெல்பாட்டம் பேண்ட், ஹேர் ஸ்டைல்’ என அசத்துகின்றனர் மாணவர்கள். அந்த காட்சிகள் இன்று பார்க்க கொஞ்சம் நகைச்சுவையாகவும் இருக்கிறது. கூடவே இரு பெண்கள் மேடை ஏறி ஆடுவது இன்னும் சிறப்பு. இதோ நீங்களே அந்தக் காட்சிகளைப் பாருங்களேன். வீடியோ இதோ..

author avatar
Archana