சூடு பிடிக்கும் ‘பொம்மை டாஸ்க்’….. மாஸ்டர் பிளான் போடும் அசீம்… வெளியான பரபரப்பு ப்ரோமோ….

By Archana

Published on:

பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.இதில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் பின்னர் புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டில் நுழைந்தார்.
தினந்தோறும் புதுவிதமான சண்டைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன.

   

இந்நிலையில் தற்போது ‘நானும் பொம்மை… நீயும் பொம்மை’ என்கிற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த டாஸ்ட் ஆரம்பித்ததிலிருந்து போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த டாஸ்க்கானது இன்றும் நடந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய ப்ரோமோவில் அசீம் ரச்சிதாவின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடும் படி ஆயிஷாவைக் கூறுகின்றார்.

ஆயிஷாவும் அவரின் சொற்படியே ரச்சிதாவின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி அவுட்டாகியதால் ரச்சிதா வெளியேற்றப்பட்டுள்ளார். இவர்களின் மைன்ட் கேமைப் பார்த்த ரச்சிதா ராபர்ட் மாஜ்டர் ஆகியோர் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ வெளியான அந்த ப்ரோமோ நீங்களே பாருங்க….

author avatar
Archana