“8,000 ரூபாய் கூப்பன் ரெடி…” இல்லத்தரசிகளுக்கு திமுக தரும் மெகா கிப்ட்…. உஷார் மக்களே…!!

By Devi Ramu on சித்திரை 17, 2026

Spread the love

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான சிறப்பு டிஜிட்டல் வவுச்சர்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பிற்காக இந்தத் திட்டம் பயனாளி அடையாளச் சான்று (Aadhaar Redacted) மற்றும் ரகசிய குறியீட்டுடன் (OTP) இணைக்கப்பட்டிருக்கும். தற்போது இதைப் பயன்படுத்திச் சில போலி கூப்பன்கள் சமூக வலைதளங்களில் உலவுவதால், புதிய ஆட்சி அமைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதையும் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்தாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், அரசு அங்கீகரிக்கும் தனியார் கடைகளில் தங்களுக்குப் பிடித்தமான பிராண்ட் பொருட்களை இந்த வவுச்சர்கள் மூலம் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். பழைய பொருட்களுக்குப் பதில் புதியவற்றை மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உண்டு. இது தரமான பொருட்களைத் தேர்வு செய்ய மக்களுக்கு வழிவகுப்பதோடு ஊழலையும் தடுக்கும். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது குடும்பப் பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.