வெள்ளி திரையில் 90 களில் ஜொலித்த நடிகை மோகினியா இது .? தற்போது எப்படியுள்ளார் பாருங்க , புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஈரமான ரோஜாவே படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மோகினி அவர்கள். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்த நடித்த தாய்மொழி, தாயகம், நான் பேசநினைப்ப தெல்லாம்,புதிய மன்னர்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்,

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்  நடிகை மோகினி. மோஹிணி கிறிஸ்டினா ஸ்ரீனிவாசன் இவர் 1978 ஜூன் 9ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர்.தற்போது படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் ஒரு சில தொலைக்காட்சி தொடரில் கூட நடித்துள்ளார். நடிகை மோகினி கதாநாயகியாக நடித்த போதே,

சன் தொலைக்காட்சியில் 96 ஆம் ஆண்டு ஒளிபரப்பான காதல் பகடை என்ற தொடரில் நடித்தார். பட வாய்ப்புகள் குறையவே பிறகு 1999ஆ ம் ஆண்டே ‘பரத்’ என்ற ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம்  செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார். கடைசியாக 2011ல் கலெக்டர் என்ற ஒரு மலையாள   படத்தில் நடித்தார்.