வெளிநாட்டில் விவசாயம் இப்படித்தான் நடக்குமா? அடேங்கப்பா இவ்வளவு பிரமாண்டமா இருக்கே…!

By Archana on ஏப்ரல் 14, 2021

Spread the love

வெளிநாடு என்றாலே நாம் பிரமாண்டமாகத்தான் பார்க்கிறோம். அங்கே விவசாயம்கூட பிரமாண்டமாகத்தான் நடக்கிறது. நம்மூரில் நெற்றி வியர்வை நிலத்தில் விழ, வேட்டியோடு விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டு விவசாயம் நம்மூரு ஷங்கர் படம் போல மிகவும் பிரமாண்டமாக உள்ளது.

   

இன்று பலரும் படித்து நல்லவேலைகளுக்குச் சென்றுவிட்டதால் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட பலரும், அதைவிட்டே நகர்ந்து வருகின்றனர். இதனால் விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இப்படியான சூழலில் வெளிநாடுகளில் விவசாயம் பெரிய, பெரிய இயந்திரங்களைச் சார்ந்தே உள்ளது. பிரமாண்டமான இயந்திரங்களினால் விவசாய வேலை நேரம் குறைவதோடு, அதற்கான பலனும் அதிகளவில் உள்ளது.

   

 

அந்தவகையில் இப்போது வெளிநாட்டில் இயந்திரங்களின் உதவியோடு விவசாயம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பூசணி, கேரட், கொய்யா, தர்பூசணி என இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்வது செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன். விவசாயம் வெளிநாட்டில் எவ்வளவு பிரமாண்டமாக நடக்கிறது எனத் தெரியும்.