விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து பூவையாருக்கு அ.டித்த அதிர்ஷ்டம்… எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

By Archana

Published on:

பிரபல ரிவியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற பூவையார் மாஸ்டர் படத்தினைத் தொடர்ந்து மற்றொரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

   

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூன். இதன் தமிழ் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிக்க உள்ளார்.

அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கும் அந்தகன் படத்தில் கே.எஸ் ரவிகுமார், கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி மற்றும் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கபிஸ் என்று செல்ல பெயருடன் வலம்வந்த பூவையரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் இதற்கு முன்பு தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana