Connect with us

Tamizhanmedia.net

விஜய்யின் சைக்கிள் பயணம்… நடிகை ஓவியா என்ன கூறியுள்ளார்னு பாருங்க..!

CINEMA

விஜய்யின் சைக்கிள் பயணம்… நடிகை ஓவியா என்ன கூறியுள்ளார்னு பாருங்க..!

நடிகர் விஜய் ஓட்டுப்போட சைக்கிளில் சென்ற புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகை ஓவியா. தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

   

பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சற்று வித்தியாசமான, தனது வாக்கினை செலுத்துவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, அருகே இருக்கும் வாக்கு சாவடி மையத்திற்கு சைக்கிளிலையே சென்றார் நடிகர் விஜய்.

வாக்களிப்பதற்காக விஜய் சைக்கிளில் சென்ற வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேநேரம் விஜய் சைக்கிள் சென்றது குறித்து சில விவாதங்களும் கூட நடந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்ற புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஓவியா, “ஆகா! நன்று; மிக நன்று! (BRAVO) என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top