வாத்தி கம்மிங் ஒத்து….! “பாடலுக்கு நடனமாடி குழந்தைகளை குஷிப்படுத்திய ஆசிரியர்”….. வைரலாகும் வீடியோ….

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அங்கன்வாடி ஆசிரியர் ஒருவர் விஜய் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மூன்று வயதில் இருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு ஆடல், பாடல் மூலமாக புகைப்படங்கள் மூலமாக ஆரம்பகால கல்வியை போதித்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் நல்லொழுக்கம், பேசுவது, பழக்க வழக்கங்கள் போன்ற சில நற்குணங்களையும் கற்பித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்தான காய்கறி உணவுகளும் முட்டைகளும் வழங்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏற்றவாறு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும் குழந்தைகளாக மாறி அவர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.

தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்கள் செய்யும் செயல்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்காக நடனமாடி காட்டுகிறார். மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் ஒத்து என்ற பாடலுக்கு அவர் நடனமாட குழந்தைகள் கைத்தட்டி மகிழ்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்..