Connect with us

Tamizhanmedia.net

வயதானா காலம்..சாலையோர வாழ்க்கை.. ஆனாலும் பாட்டியின் நேர்மையைப் பாருங்க.. சிலிர்த்துடுவீங்க..!

NEWS

வயதானா காலம்..சாலையோர வாழ்க்கை.. ஆனாலும் பாட்டியின் நேர்மையைப் பாருங்க.. சிலிர்த்துடுவீங்க..!

கொரோனா காலம் நமக்கு பல வாழ்வியல் யதார்த்தத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அரசு திடீரென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுண் போட்டு வருவதால் உண்மையில் ரொம்பவே கஷ்டப்படுவது சாலையோரவாசிகள் தான்.

சொந்தமாக வீடு இல்லாத அவர்கள் சாலையோரம் இருப்பார்கள். அந்தப்பக்கமாக போய், வருபவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்துதான் உணவு சாப்பிட்டு வயிற்றை நிரைப்பார்கள். ஆனால் இப்போது கொரோனா காலம் என்பதால் சாலையோரம் தர்மம் எடுப்போருக்கும் உணவு கிடைப்பதில்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதும் குறைந்திருப்பதால் சாலையோரம் தர்மம் எடுப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அதுபோன்றவர்களுக்கு ஆங்காங்கே இருக்கும் இளைஞர்கள் தான் தன்னார்வலர்களாக உணவு கொடுத்து வருகின்றனர். அப்படி, ஒரு இளைஞர் கூட்டம் உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் அமர்ந்திருந்த பாட்டிக்கு சாப்பாட்டுப் பொட்டலத்தைக் கொடுக்க, சாப்பாட்டுக்காக பசியோடு காத்திருந்த பாட்டி, அந்த சாப்பாட்டுக்கு காசு என தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த பத்து ரூபாயை எடுத்தார். இந்தக் காட்சி பார்க்கவே நம் கண்களை குளமாக்குகிறது. இதோ நீங்களே பாருங்களேன். உருகிடுவீங்க..

Continue Reading
You may also like...

More in NEWS

To Top