யோகி பாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நடராஜன் இடையே இப்படி ஒரு உறவா….? நம்ப முடியலயே : வெளியாகிய மாஸ் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகர் யோகி பாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவரது மண்டேலா திரைப்படம் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக விஜய் டிவியில் வெளியானது.

யோகி பாபு, நடராஜன்இப்படி ஒரு உறவா அறிமுக இயக்குனர் மதோனி அஸ்வின் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒய்.நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷ்பெர்ரி நிறுவனங்களுடன் இணைந்து ‘மாரி’ இயக்குனர் பாலாஜி மோகன் தனது ஓபன் விண்டோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இதில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் (டூலெட் புகழ்), கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப பக்கத்தில், படத்தின் ஒளிப்பதிவை விது ஐயண்ணா கையாள, படத்தின் எடிட்டிங்கை பிலோமின் ராஜ் கையாளுகிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புகழ்பெற்ற Ipl-ல் ஹைதராபாத் அணியில் ஆடி வரும் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மண்டேலா திரைப்படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆன அவர் யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் தளத்தில் “ம.ண்டேலா திரைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன்.

யோகிபாபுவின் அ.சாத்தியமான நடிப்பு என்னை வெகுவாக க.வர்ந்துள்ளது. என்ன ஒரு அற்புதமான நடிகர். என்ன ஒரு அற்புதமான கதை. பின்புதான் தெரியும் அவர் கிரிக்கெட் வீரர் நடராஜனின் நண்பர் என்று. எனவே அவருடன் ஒரு ரசிகனாக வீடியோ காலில் பேசினேன்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் யோகிபாபு மற்றும் கிரிக்கெட் வீரர் நடராஜன் இருவரும் நண்பர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *