Connect with us

Tamizhanmedia.net

ம ர ண த்தின் விளிம்பிற்கு சென்று உயிர் பிழைத்த அருண்பாண்டியன்..! என்ன நடந்தது..? ஒரு இரவில் நடந்த சோகம்..!

NEWS

ம ர ண த்தின் விளிம்பிற்கு சென்று உயிர் பிழைத்த அருண்பாண்டியன்..! என்ன நடந்தது..? ஒரு இரவில் நடந்த சோகம்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்னுடைய அப்பாவுக்கு நடந்த சிகிச்சைகள் குறித்தும், தாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் அவரது மகள் கீர்த்தி பாண்டியன்.

கொரோனாவின் 2வது அலை கோரத்தாண்டம் ஆடி வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தன்னுடைய தந்தையின் உடல்நிலை குறித்து பதிவிட்டுள்ளார் கீர்த்தி பாண்டியன்.

அதில், ஒரு நாள் இரவு அப்பா லேசான நெஞ்சு வலி, தூங்க முடியவில்லை என்று சொன்னார். அவரை அவசரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்குக் கொரோனா தொற்று உறுதியானது.

எனவே திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் 7 நாட்களும் மருத்துவ உதவிகள் கொடுத்து நாங்களே கவனித்துக் கொண்டோம்.

எனினும் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால், அதிகம் பயந்து விட்டோம், அவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அதிகளவு பாதிப்பில்லை என்றார்கள்.

கொரோனா சரியானதும் இதயப் பிரச்சனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றோம், அங்கு பரிசோதித்த போது தான், இதயத்தில் அடைப்பு இருந்ததும், 90 சதவீதம் தீவிரமடைந்து இருப்பதும் தெரியவந்தது.

எனவே அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி செய்யப்பட்டது. கொரோனாவிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்தாலும் அப்பா செய்துகொள்ளத் தயாராக, வலிமையுடன் இருந்தார்.

2.5 மணி நேர முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீவிர பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த தொற்று காலத்தில் கூடுதலாக இந்த விஷயமும் சேர்ந்துகொண்டது எங்களுக்கு அதிக மனச்சோர்வைத் தந்தது. முன்னெச்சரிக்கையாக, நாங்கள் அனைவரும் அப்பாவைச் சுற்றி இருக்க முடியாத சூழல். அவரோடு பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் சமூக விலகலைப் பின்பற்றினோம்.

மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். இப்போது என் சூப்பர்ஹீரோ அப்பா நலமாக இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார்.

அப்பா, மனரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ சரியில்லை என்பதை அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது. நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது மிக முக்கியம்.

அறிகுறிகள் தென்படும்போது அதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். சிறிய அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம்.

தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top