மாஸ்டர் பட பாடலுக்கு பட்டையைக் கிளப்பிய குட்டி தேவதை… நடிகர் விஜயையே ஓவர்டேக் பண்ணிடுவாங்க போலயே..!

By Archana on ஏப்ரல் 20, 2021

Spread the love

மாஸ்டர் படப் பாடலுக்கு ஒரு குட்டி தேவதை செமையாக ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   

தமிழ் சினிமாவில் இன்று மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் விஜய். இளையதளபதியாக தன் சினிமா கேரியரைத் துவங்கியவர், இன்று தளபதியாக அசத்துகிறார். இவர் நடிப்பில், லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ஆடும், ‘வாத்தி கம்மிங்’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு ஒரு குட்டி தேவதை சேம ஆட்டம் போடுகிறது.

   

 

பொதுவாகவே குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான். அதை நம்மை அறியாமல் பார்த்துக்கொண்டே இருப்போம். அதிலும் தளபதி விஜயின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கே ஆடினால் கேட்கவும் வேண்டுமா? செம வைரலாக இந்தப் பாடல் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த குட்டித் தேவதையின் ஆட்டத்தை தளபதி விஜய்யே பார்த்தாலும் அசந்துவிடுவார் போல் இருக்கிறது. இதோ நீங்களே பாருங்களேன். வீடியோ இதோ..