CINEMA
மாநாடு படத்தில் இணைந்த மேலும் சில குக் வித் கோ.மாளி நட்சத்திரங்கள், யார் யார் தெரியுமா…?
நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது, இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்று தான் கூறவேண்டும்.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தில் குக் வித் கோ.மாளி பிரபலம் புகழ், சிம்பு உடன் நடித்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.இதனிடையே தற்போது மாநாடு திரைப்படத்தில் மேலும் சில குக் வித் கோ.மாளி பிரபலங்கள் இணைத்துள்ளனர்.
ஆம் பாலா, சரத் உள்ளிட்ட முக்கிய குக் வித் கோ.மாளி பிரபலங்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர். இதோ அவர்கள் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம்.