மரண படுக்கையில் தந்தை …! “அழ கூடாது மகனே…! அம்மாவையும் தங்கையையும் நல்லா பாத்துக்கோ…” இணையத்தில் வைரலாகும் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

கடைசி மூச்சை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு தந்தை, தனது சிறு வயது மகனுக்கு வாழ்க்கையின் மிக முக்கிய பொறுப்புகளை அறிவுறுத்தும் உருக்கமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. புற்றுநோயின் தீவிரப் பாதிப்பால் மரணத்தின் விளிம்பில் மருத்துவமனை படுக்கையில் கிடக்கும் அந்தப் தந்தை, தன் நிலையை நினைத்துக் கவலைப்படாமல் தனது குடும்பத்தின் எதிர்காலத்தைக் குறித்தே சிந்திக்கிறார். குஜராத்தி மொழியில் பேசும் அவர், தனது மகனிடம் தான் மறைந்த பிறகு ஒருபோதும் மனதளவில் தளர்ந்துவிடக் கூடாது என்றும் கண்ணீர் சிந்தக் கூடாது என்றும் நடுங்கும் குரலில் தேற்றுகிறார்.

மேலும், இனி நீ தான் பெரியவனாக மாறி உனது தாயையும் சகோதரிகளையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற குடும்பப் பொறுப்பை புரிய வைக்கிறார். தான் இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும் தனது ஆசிகளும் வழிகாட்டுதலும் எப்போதும் அவனுடன் இருக்கும் என்று தைரியம் கூறுகிறார். இறுதி மூச்சு வரை சுயநலமின்றி தன் பிள்ளைகளின் நலனை மட்டுமே யோசிக்கும் பெற்றோரின் கலப்பில்லாத அன்பை உணர்த்தும் இந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.