மனைவிக்கு உங்கள் மீது கோபம் வராமல் இருக்க வேண்டுமா..? இதை மட்டும் கணவர்கள் செஞ்சு பாருங்க… லைப் ஸ்மூத்தா போகும்..!

ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மிக முக்கியமான திருப்புமுனை காலக்கட்டம் அவனது திருமணம் தான். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போதெல்லாம் திருமணம் முடிந்த கையோடு சின்ன, சின்ன சண்டைகளுக்கெல்லாம் மனச்சோர்வு அடைந்து நீதிமன்ற படியேறி விடுகின்றனர். அந்த சூழல் வராமல் உங்களைக் காக்கும் சூப்பர் டிப்ஸ் தான் இது! கணவன்மார்கள் இதையெல்லாம் பாளோ செய்தாலே மனைவிக்கு உங்கள்மீது கோபமே வராது.

அப்படி என்ன விசயம் எனக் கேட்கிறீர்களா? இதோ உங்களுக்காக அந்த ஸ்பெசல் டிப்ஸ்..

எதை பேசத்துவங்கினாலும் அனுசரணையாக உங்கள் மனைவியின் கையைப் பற்றிக்கொண்டு பேசுங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் மீதான கோபம் பஞ்சாக பறந்துபோகும். சாப்பிடும்போது மனைவியோடு சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். அப்போது மனம் விட்டு நிறைய விசயங்களைப் பேச வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களையும் சேர்த்துக்கொண்டு ரவுண்டாக இருந்து சாப்பிடுங்கள். அப்போது உங்கள் மனைவிக்கு உங்கள் மீது பாசம் அதிகரிக்கும்.

சில தருணங்களில் கணவர் மனைவி இருவரும் சேர்ந்து ஒரே குளியல் அறையில் குளிக்கலாம். இதன் மூலம் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். காலையில் சமையல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என பிஸியும், எரிச்சலும் அடைவார். அந்த சுமையை குறைக்க உதவுங்கள்.

காலையில் தூங்கி முழித்ததும், கண்வன்மார்கள் மனைவியைப் பார்த்து ஒரு சின்ன ஸ்மைலோ, அல்லது குட்மார்னிங்கோ வைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களையும் பெரிதாக மதிப்பார்கள். அப்புறமென்ன உங்களுக்குள் சண்டையே இருக்காது.

Leave a Reply

Your email address will not be published.